தேனியில் தேசிய கொடியுடன் பா.ஜ.க.வினர் ஊர்வலம்
தேனி, கம்பத்தில் தேசிய கொடியுடன் பா.ஜ.க.வினர் ஊர்வலம் சென்றனர்
சுதந்திர தினத்தையொட்டி தேனியில் பா.ஜ.க. மகளிரணி சார்பில், தேசியகொடியுடன் ஊர்வலம் நடந்தது. நேரு சிலை சிக்னல் அருகில் தொடங்கிய ஊர்வலம் பெரியகுளம் சாலை வழியாக கட்சியின் மாவட்ட அலுவலகம் வரை நடந்தது. ஊர்வலத்துக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி செயலாளர் மீனாம்பிகை, பா.ஜ.க. நகர தலைவர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின் போது அவர்கள் தேசியகொடியை கையில் ஏந்தியபடி சென்றனர்.
இதேபோல் பா.ஜ.க. மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு சார்பில் கம்பத்தில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. கம்பம் காந்தி சிலையில் தொடங்கிய ஊர்வலம் வ.உ.சி. திடல், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தெரு, பார்க் ரோடு, வேலப்பர் கோவில் தெரு வழியாக சென்று மீண்டும் காந்தி சிலையில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு பெருங்கோட்ட பொறுப்பாளர் ஆனந்த கிருஷ்ணன், மாநில செயலாளர் வசந்த பாலாஜி, மாவட்ட தலைவர் கோபிநாத், கம்பம் நகர பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.