தேனியில் அண்ணாமலை உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்
தேனியில் அண்ணாமலை உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்
தேனி
மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது இன்று காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க.வினர் காலணி வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேனி பங்களாமேட்டில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து போராட்டம் நடத்த தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் திரண்டனர். அப்போது அவர்கள் அண்ணாமலையின் உருவபொம்மையை தீ வைத்து கொளுத்தினர். அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.வினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்துக்கு தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் விஸ்வா தலைமை தாங்கினார். பெரியகுளம் தொகுதி அமைப்பாளர் ராஜேஷ்குமார், நகர அமைப்பாளர் அரவிந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
Related Tags :
Next Story