தேனியில்தனியார் வேலைவாய்ப்பு முகாம்:இன்று நடக்கிறது
தேனியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கூறினார்.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். எனவே 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள், பிளஸ்-2, ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம். முகாமிற்கு வருபவர்கள் தங்களின் சுயவிவர நகல், கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story