இந்தியாவில் பாதிப்பு சற்று குறைந்து புதிதாக 6,594 பேருக்கு தொற்று
இந்தியாவில் பாதிப்பு சற்று குறைந்து புதிதாக 6ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா தொற்று பதிவானது.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் 6,594 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
நேற்று முன் தினம் 8,582 நேற்று 8,084 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 6,594 ஆக குறைந்தது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 47,995 லிருந்து 50,548 ஆனது. இந்தியாவில் குண்மடைந்தோர் எண்ணிக்கை 4,26,57,335 லிருந்து 4,26,61,370 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 4,035 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் இதுவரை 195.35 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story