கடமலைக்குண்டு பகுதியில்தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி:விவசாயம் பாதிப்பு


கடமலைக்குண்டு பகுதியில்தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி:விவசாயம் பாதிப்பு
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு பகுதியில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தேனி

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக தினந்ேதாறும் 5 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த சூழ்நிலையில் மின்தடை காரணமாக வீடுகளில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயத்திற்கு நீர் தேவை இரண்டு மடங்காகி உள்ளது.

இந்த 5 மணி நேரம் மின்வெட்டு காரணமாக பயிர்களுக்கு முழுமையாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் இரவு நீண்ட நேரம் வரை தோட்டங்களில் காத்திருந்து மின்சாரம் வரும் நேரம் பார்த்து பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தடையில்லாத மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.


Next Story