கழுகுமலை யில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு
கழுகுமலை யில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலையில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட மாநாடு சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தலைவர் பலவேசம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சித்ரா, சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகராஜ் வரவேற்று பேசினார். மாநாட்டில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டை மாநில துணைப் பொதுச் செயலாளர் கோவை செல்வராஜ் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.6ஆயிரம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ., பி.எப். திட்டத்தை கட்டுமான தொழிலாளர்களுக்கு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் மாவட்டச் செயலாளர் சேது, மாநில பொருளாளர் முருகன், மாவட்டத் துணைத் தலைவர் தமிழரசன், கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், சிதம்பரம், எட்டப்பன், கலைமணி, ஜெய பாஸ்கர், நாகராஜ், மீனாட்சி சுந்தரம் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.