காமாட்சிபுரத்தில்அறிவியல் ஆலோசனை குழு கூட்டம்
சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் 24-வது அறிவியல் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.
சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் 24-வது அறிவியல் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. அறிவியல் மைய தலைவர் பச்சைமால் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) மகேஸ்வரன், கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். தொழில்நுட்ப வல்லுனர்கள் துறை சார்ந்த செயல்பாட்டு அறிக்கைகள் சமர்ப்பித்து, செயல்திட்ட அறிக்கைகள் குறித்து பேசினர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன், வருகிற ஆண்டில் வேளாண் அறிவியல் மூலம் விவசாயிகளுக்கு செய்ய வேண்டிய வேளாண் தொழில்நுட்பம் குறித்து பேசினார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் ஐதராபாத் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி பாஸ்கரன், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர் முத்தையா, உழவர் பயிற்சி மைய பேராசிரியர் செந்தில்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். தொழில்நுட்ப கையேடு வெளியிடப்பட்டது. முடிவில் தொழில்நுட்ப வல்லுனர் அருண்ராஜ் நன்றி கூறினார்.