காரைக்குடியில், அஞ்சலக ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்


காரைக்குடியில், அஞ்சலக ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி தபால் துறை சார்பில் தேசிய கொடி விற்பனை நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி காரைக்குடியில் அஞ்சலக ஊழியர்கள் சார்பில் தேசிய கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி தபால் துறை சார்பில் தேசிய கொடி விற்பனை நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி காரைக்குடியில் அஞ்சலக ஊழியர்கள் சார்பில் தேசிய கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

சுதந்திர தினம்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து தபால் நிலையங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் நேற்று முதல் தேசிய கொடி விற்பனை தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முதல் தேசியகொடி விற்பனைக்காக தபால் நிலையங்களில் தனி கவுண்ட்டர் அமைக்கப்பட்டு விற்பனை தொடங்கியது.

விழிப்புணர்வு ஊர்வலம்

மேலும் சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் அனைவரும் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வலியுறுத்தி காரைக்குடியில் அஞ்சலக ஊழியர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு அஞ்சலக கண்காணிப்பாளர் ஹீசைன்அகமது தலைமை தாங்கினார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றி நாட்டுப்பற்றை வெளிப்படுத்த வேண்டும்.

தேசிய கொடி விற்பனை

தேசிய கொடிகளை அனைவரும் வாங்கும் வகையில் தபால்துறை சார்பில் மிகவும் குறைந்த விலைக்கு கொடிகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி காரைக்குடி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனைக்காக உள்ளது.

இதுதவிர காரைக்குடி மற்றும் தேவகோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனைக்காக சிறப்பு கவுண்ட்டர் அமைக்கப்பட்டு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு தேசிய கொடியின் விலை ரூ.25 என நிர்ணயம் செய்யப்பட்டு ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் விற்பனை செய்யப்படும்.

தேசியகொடியை விற்பனை செய்யும்போதோ அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்லும்போதோ மரியாதையுடன் கொண்டு செல்ல வேண்டும். தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் எவ்வித செயல்களையும் செய்யக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story