கருங்கல்பாளையத்தில்850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய 2 வாலிபர்கள் கைது
கருங்கல்பாளையத்தில் 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
கருங்கல்பாளையத்தில் 850 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைது
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த கணேசனின் மகன் சூர்யா (வயது 27), கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முருகேசனின் மகன் பிரகாஷ் (26) ஆகியோர் என்பதும், அவர்கள் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து சூர்யா, பிரகாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.