கரூரில், அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்


கரூரில், அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x

கரூரில், அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு குறித்து தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 9, 13, 14-ந்தேதிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று அ.தி.மு.க. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத் தலைவர் திருவிகா, கரூர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் கமலக்கண்ணன், ரெங்கசாமி உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story