கரூரில், பிள்ளையார் நோன்பு விழா


கரூரில், பிள்ளையார் நோன்பு விழா
x

கரூரில், பிள்ளையார் நோன்பு விழா நடந்தது.

கரூர்

உலகெங்கும் வாழுகிற நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்கள் தனித்து கடைப்பிடிக்கிற நோன்பு பிள்ளையார் நோன்பு ஆகும். அதன்படி நேற்று கரூா் நகரத்தாா் சங்கம் சார்பில் ேநற்று கரூாில் பிள்ளையர் நோன்பு விழா நடைபெற்றது. இதையடுத்து விநாயகர் முன்பு உப்பு, மஞ்சள், தேங்காய், பழம், கற்கண்டு, சர்க்கரை, பொம்மை, குழந்தை சட்டை, பள்ளி புத்தகப்பை, மணமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து விநாயகர் முன்பு பூஜையில் வைக்கப்பட்ட மங்களப் பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு கிலோ உப்பு ரூ.9,001-க்கும், ஒரு தேங்காய் ரூ.2,001-க்கும், ஒரு ஜோடி மணமாலை ரூ.25 ஆயிரத்து 500-க்கும், பணப்பை ரூ.10 ஆயிரத்திற்கும், சிறிய குபேரன் சாமி சிலை ரூ.9 ஆயிரத்திற்கும், ஒரு குத்துவிளக்கு ரூ.10 ஆயிரத்து 500-க்கும், ஒரு சீப்பு வாழைப்பழம் ரூ.1,501-க்கும், ஒரு எலுமிச்சைப்பழம் ரூ. 1,700-க்கும் உள்பட 18 வகையான மங்களப்பொருட்கள் மொத்தம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் ஏலம் போனது. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு 9 வகைப்பலகாரங்களுடன் விருந்து நடைபெற்றது.


Next Story