காயல்பட்டினத்தில் ஹாமிதிய்யா சபை பொன்விழா


காயல்பட்டினத்தில்  ஹாமிதிய்யா சபை பொன்விழா
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் ஹாமிதிய்யா சபை பொன்விழா நடந்து வருகிறது

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் மஜ்லிஸீல் புகாரிஷ் ஷரிபு சபை வளாகத்தில் அமைந்துள்ள அல்மத்ரஸதுல் ஹாமிதிய்யா சபையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மீலாது நபி விழா, மீலாது கௌது விழா, ஹாமிது ஒலியுல்லா நினைவு விழா, சபையின் 53-வது கல்வியாண்டு தொடக்கவிழா, ஹாபிழூல் குர்ஆன் பட்டமளிப்பு விழா ஆகிய ஐம்பெரும் விழா நேற்று தொடங்கியது.

இதை முன்னிட்டு ஹாமிதிய்யா சபை மாணவர் முதற்கட்ட நகர் வள பேரணி நடைபெற்றது. வருகிற 25-ந் தேதி வரை விழா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக 22-ந் தேதி சமூக நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கில் சமத்துவ மடாதிபதி சாமி தோப்பு ஆதீனம் பால பிரஜாபதி அடிகளார், கல்லாமொழி மீனவர் சமூக கல்வி மையத் திட்ட இயக்குனர் அருட்தந்தை ரா. பி.சகேஷ் சந்தியா அடிகளார், தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ. காஜாமுகைதீன் ஆலிம், முன்னாள் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவு, சன்மார்க்கப் போட்டிகள், மாணவர்கள் பேரணி நடைபெறுகிறது.


Next Story