காயல்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காயல்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் எஸ். டி. பி. ஐ. கட்சி சார்பில் வள்ளல் சீதக்காதி திடலில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் முகமது உமர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் மைதீன் கனி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மின்னல் அம்ஜத், மீனவர் அணி மாவட்ட தலைவர் ஜாகீர், மாநில வேளாண் அணி தலைவர் சேக் அப்துல்லா, கல்லாமொழி மீனவ சமூக கல்வி மையத்தின் இயாக்குனர் சகேஷ் சந்தியா, மாநில செயற்குழு உறுப்பினர் சுல்பிகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story