காயல்பட்டினத்தில்பெண் விஷம் குடித்து தற்கொலை
காயல்பட்டினத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி:
தேனியை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 50). இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவில் வந்து குடியேறினார். பின்னர் மதம் மாறிய அவர் மூசா என்று பெயரை மாற்றிக்கொண்டார். இவரது மனைவி ராஜேஸ்வரி என்ற பபிபா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பபிபாவிற்கு கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். காயல்பட்டினம் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று அவருக்கு நோய் குணமாகாததால், மனமுடைந்து காணப்பட்டாராம்.
சம்பவத்தன்று காலையில் மகள் தீபாவுக்கு போன் செய்து நோயால் அவதிப்படுவது குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவர், தந்தை மூசாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர், காயப்பட்டினம் வீட்டிற்கு சென்ற போது பபீபா மயங்கி கிடந்துள்ளார். அருகில் பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்துள்ளது. அவர் அந்த மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.
பதறிப்போன அவர், பபீபாவை மீட்டு காயப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இது தொடர்பாக மூசா அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லத்துரை, பிரபு குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.