கயத்தாறில்மாட்டு வண்டி பந்தயம்
கயத்தாறில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், பெரிய மாட்டு வண்டி,சின்ன மாட்டு வண்டி, தேன்சிட்டு வன்டி ஆகிய 3 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் 121 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுவண்டிக்கு 12 கி.மீ தூரமும், சின்ன மாட்டுவண்டிக்கு 10 கி.மீ. தூரமும், தேன்சிட்டு மாட்டு வண்டிக்கு 8 கி.மீ. தூரமும் நிர்ணயிக்கப்பட்டது. இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு ரூ.30 ஆயிரமும், இரண்டாவது பரிசு ரூ.25 ஆயிரமும், மூன்றாவது பரிசு ரூ.20ஆயிரமும், நான்காம் பரிசு 5ஆயிரமும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசுரூ.25 ஆயிரமும், இரண்டாவது பரிசு ரூ.20ஆயிரமும், மூன்றாவது பரிசு ரூ.15 ஆயிரமும், நான்காவது பரிசு ரூ.5ஆயிரமும், தேன்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு ரூ.20 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரமும், நான்காம் பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.