கயத்தாறில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கயத்தாறில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமோன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய குழு உறுப்பினர் சீனிப்பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகர செயலாளர் மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவர் கொண்டால் சாமி, செட்டிகுறிச்சி கிளை செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், அன்புமணி, ராசையா, செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story