கயத்தாறில்இளைஞர்கள் விழிப்புணர்வு பொதுக் கூட்டம்
கயத்தாறில் இளைஞர்கள் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறில் அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் தேரடி வீதியில் இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இளைஞர்கள் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவரும் மற்றும் நிறுவன தலைவருமான மணக்கரை பேச்சிமுத்து தேவர் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் கல்லூர் கார்த்திக்பாண்டியன், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்து, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கென்னடி, தென் மண்டல செயலாளர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பூல்பாண்டியன் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட செயலாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கோவில்பட்டியை அடுத்துள்ள அத்தை கொண்டான் காளியம்மன், விநாயகர், காலபைரவர், விஷ்ணு துர்க்கை கோவில் ஆடி திருவிழா நடந்தது. காலை 6 மணிக்கு வடக்குத்திஅம்மன் அழைப்பும், காலை 9 மணிக்கு அக்னிசட்டி எடுத்து ஊர் விளையாடுதல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் முன்னாள் அமைச்சர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து, அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.