கீழ்வேளூரில், ரெயில் தண்டவாளத்தில் நின்று தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கீழ்வேளூரில், ரெயில் தண்டவாளத்தில் நின்று தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரெயில்வேயை கண்டித்து கீழ்வேளூரில் ரெயில் தண்டவாளத்தில் நின்று தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரெயில்வேயை கண்டித்து கீழ்வேளூரில் ரெயில் தண்டவாளத்தில் நின்று தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில் மறியல் போராட்டம்

டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரெயில்வே துறையை கண்டித்து நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வர்த்தகர் சங்கம், ெரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் நேற்று முதல் தொடர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்ந்து நேற்று முன்தினம் ரெயில்வேதுறை அதிகாரிகள் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அறிவித்தப்படி போராட்டம் நடைபெறும் என போராட்டக்குழுவினர் அறிவித்தனர்.

தண்டவாளத்தில் நின்று ஆர்ப்பாட்டம்

அதன்படி நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில் நிலையத்துக்கு தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட ரெயில் வருகைக்காக காத்திருந்தனர். பகல் 12 மணி வரை ரெயில் வராத காரணத்தால் போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்தது. மழையில் நனைந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தகர் சங்கம், ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போலீசார் குவிப்பு

போராட்டம் காரணமாக கீழ்வேளூர் ரெயில் நிலையத்தில் நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 200-க்கு மேற்பட்ட போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு துறை வாகனம், வஜ்ரா வாகனம், உள்ளிட்டவை அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது


Next Story