கொப்பம்பட்டி கிராமத்தில்பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி


கொப்பம்பட்டி கிராமத்தில்பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொப்பம்பட்டி கிராமத்தில் பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள கொப்பம்பட்டி கிராமத்தில் கோவில்பட்டி நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் மற்றும் சென்னை நம் கானகம் அமைப்பு சார்பில் 25 ஆயிரம் பனைமர விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு கோவில்பட்டி நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனர் பி.கே. நாகராஜன் தலைமை தாங்கினார். கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் பனை விதைகள் நடுதல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஏராளமான பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் தீத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, குருவிநத்தம் பஞ்சாயத்து தலைவர் மரியசூசை அந்தோணிசாமி, சென்னை நம் கானகம் அமைப்பு நிறுவனர் ராஜா, சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவர் மணிவண்ணன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story