கோவில்பட்டியில் விழிப்புணர்வு ஆக்கி போட்டி


கோவில்பட்டியில்  விழிப்புணர்வு ஆக்கி   போட்டி
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் விழிப்புணர்வு ஆக்கி போட்டி நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

உலகக்கோப்பை ஆக்கிப்போட்டி தொடங்க உள்ளதை யொட்டி கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பில், வ. உ. சி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் விழிப்புணர்வு ஆக்கிப்போட்டி நடத்தப்பட்டது. இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் திட்டங்குளம் பாரதி ஆக்கி அணியும், கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் திட்டங்குளம் அணி 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 40 வயதிற்கு மேல் மூத்தோர் ஆக்கிப் போட்டி நடந்தது. இதில் 6 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி ஆக்கி அணியும், இலுப்பையூரணி ஆக்கி அணியும் மோதின. ஆட்ட நேரத்தில் 2 அணிகளும் தலா 1 கோல் போட்டதால், ஆட்டம் சமனில் முடிந்தது. வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியை கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சிக் கழகச் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன் பரிசுகளை வழங்கினார்.


Next Story