கோவில்பட்டியில்அனைத்து ரெயில்களும் நின்று செல்ல கோரிக்கை


கோவில்பட்டியில்அனைத்து ரெயில்களும்  நின்று செல்ல கோரிக்கை
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று தென்னகரெயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று ெசல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு

கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு தென்னக ரெயில்வே அதிகாரிகள் கே ரவிச்சந்திரன் தலைமையில் மது சாதனா, கொட்டால உமாராணி, அபிஜித் தாஸ், ராம்குமார்பதன் ஆகியோர் கொண்ட குழுவினர் வந்தனர். ரெயில் நிலையத்தில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் ரெயில் பயணிகளிடம் குறைகள் கேட்டனர்.

பயணிகள் கோரிக்கை

அப்போது பயணிகள் கூறுகையில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும். 2-வது பிளாட்பாரத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும். மின்விளக்கு வசதி, கழிப்பறை, குடிநீர் வசதி, பயணிகளுக்கான இருக்கை வசதிகள் செய்ய வேண்டும். முதல் பிளாட்பாரத்திலிருந்து 2 வது பிளாட்பாரம் செல்வதற்கு போடப்பட்ட மேம்பாலத்திற்கு லிப்ட் வசதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள், வயோதிகர்கள் செல்வதற்கு வசதியாக பேட்டரி கார் இயக்க வேண்டும். கூடுதல் ரெயில்வே போர்ட்டர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

அதிகாரிகள் உறுதி

இதுகுறித்து பரிசீலனை செய்துநடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் அதிகாரிகள் சாத்தூர் ரெயில் நிலையத்தில் ஆய்வுக்குபுறப்பட்டுச் சென்றனர்.


Next Story