கோவில்பட்டியில் அம்பேத்கர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில்  அம்பேத்கர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அம்பேத்கர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருத்துவமனை முன்பு அம்பேத்கர்- பெரியார்- மார்க்சிய உணவாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் புலிகள் வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை தாங்கினார்.

அம்பேத்கரை தொடர்ந்து விமர்சித்து வரும் இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அமைப்புகளை, தமிழக அரசு தடை செய்து, அவர்களை கண்காணிப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். மதவாத வெறுப்புணர்வை தூண்டி, அம்பேத்கர் குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்களை பரப்பும் தமிழக கவர்னரை கண்டித்தும், மத்திய அரசு அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக, வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செய்தி தொடர்பாளர் கனியமுதன், ஜெய் பீம் தொழிலாளர் நல சங்க தலைவர் செண்பக ராஜ், ஆதித்தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், தென்மண்டல செயலாளர் நம்பிராஜ் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story