கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஓய்வூதியர் சங்கத்தினர் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கை மனுவை மத்திய அமைச்சருக்கு தபாலில் அனுப்பிவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஓய்வூதியர்களுக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 15 சதவீத பென்சன் பணத்தை வழங்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட துணை செயலாளர் சுப்பையா, துணை தலைவர் கந்தசாமி, கிளை துணை செயலாளர் பரமசிவன், அகில இந்திய துணை தலைவர் மோகன் தாஸ், மாநில குழு உறுப்பினர் கோலப்பன், இணை பொருளாளர் திருவட்ட போத்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Related Tags :
Next Story