கோவில்பட்டியில் சி.ஐ.டி.யு. மாநாட்டு ஜோதிக்கு வரவேற்பு


கோவில்பட்டியில்  சி.ஐ.டி.யு. மாநாட்டு ஜோதிக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் சி.ஐ.டி.யு. மாநாட்டு ஜோதிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கன்னியாகுமரியில் இன்று (வெள்ளிக்கிழமை) சி.ஐ.டி.யு. 15-வது தமிழ்நாடு மாநில மாநாடு தொடங்குகிறது. இதையொட்டி கோவில்பட்டிக்கு வந்த மாநில மாநாடு ஜோதி பயணத்துக்கு சி.ஐ.டி.யு.வினர் வரவேற்பு அளித்தனர்.

பசுவந்தனை சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட குழு உறுப்பினர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். கன்வீனர் சக்திவேல்முருகன் வரவேற்றார். மாநில செயலாளர் மோகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, வட்டார தீப்பெட்டி சங்க நிர்வாகி மோகன்தாஸ், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜோதி எட்டயபுரம், குறுக்குச்சாலை வழியாக தூத்துக்குடிக்கு எடுத்து செல்லப்பட்டது.


Next Story