கோவில்பட்டியில்லிங்கம்பட்டி சமத்துவபுர மக்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில்லிங்கம்பட்டி சமத்துவபுர மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் லிங்கம்பட்டி சமத்துவபுர மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு நேற்று லிங்கம்பட்டி பஞ்சாயத்து சமத்துவபுரத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊர் நாட்டாமை கடற்கரையாண்டி தலைமை தாங்கினார்.

சமத்துவபுரத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சுற்றி கம்பி வேலி அமைத்து தர வேண்டும். பூங்காவுக்குள் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். பூங்கா அருகே பராமரிப்பின்றி உள்ள சுகாதார வளாக கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும். ஆழ்துளை கிணறுகளை முறையாக பராமரிக்க வேண்டும். ஊரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பொது குளியல் தொட்டி அமைத்து தர வேண்டும். மயானத்துக்கு அருகே காத்திருப்போர் அறை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தியை சந்தித்து கோரிக்கை மனு அளித்து விட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story