கோவில்பட்டியில் ஓட்டுநர் தொழிற்சங்க அலுவலகம் திறப்புவிழா
கோவில்பட்டியில் ஓட்டுநர் தொழிற்சங்க அலுவலகம் திறப்புவிழா நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி புது ரோட்டில் தமிழ்நாடு உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க மாவட்ட அலுவலக திறப்பு விழா நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமை தாங்கினார். வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழியபாண்டியன் அலுவலகத்தை திறந்து வைத்து, சாலைகளில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது குறித்தும், புதிய அபராதம் குறித்தும் விளக்கம் அளித்து ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு கையேடுகளை வழங்கினார்.
தொழிற்சங்க செயலாளர் ரவீந்திரன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வன சுந்தர், சப்- இன்ஸ்பெக்டர் தர்மராஜ் ஆகியோர் வாகனங்களில் கண்காணிப்பு கேமரா இணைப்பதின் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும் பேசினர். தொழிற்சங்க செய்தி தொடர்பாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story