கோவில்பட்டியில் பெட்ரோல், டீசல் தரத்தை வாடிக்கையாளர்கள் பரிசோதிக்கும் முகாம்
கோவில்பட்டியில் பெட்ரோல், டீசல் தரத்தை வாடிக்கையாளர்கள் பரிசோதிக்கும் முகாம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன விற்பனை நிலையமான ஞானமலர் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் அளவு மற்றும் தரத்தை வாடிக்கையாளர்களே சரிபார்த்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில்பட்டி தாசில்தார் சுசிலா முகாமை தொடங்கி வைத்தார். பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை தாசில்தார் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் சோதனை செய்து உறுதிப்படுத்தினார். பல வாடிக்கையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து ெகாண்டு தரத்தை பரிசோதித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஞானமலர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மைக்கேல் அமலதாஸ் மற்றும் அமலி அமலதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story