கோவில்பட்டியில்ஓடை பாலம் அகற்றம்
கோவில்பட்டியில் புதன்கிழமை பொக்லைன் எந்திரம் மூலம் ஓடை பாலம் அகற்றப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மெயின் ரோடு நீர்வரத்து ஓடையின் மேல்புறம் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் உள்ளது. கோவில் முன்பிருந்து மெயின் ரோடு வரை ஓடையின் மேல் காங்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. இதனை அகற்ற வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நீர்வரத்து ஓடை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர்.
இதற்கிடையே பாலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சமுதாயத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில், தாசில்தார் சுசிலா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், சிவசுப்பு, இன்ஸ்பெக்டர்கள் சுகாதேவி, பத்மாவதி உள்பட பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் காங்கிரீட் பாலம் அகற்றப்பட்டது.