கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.6 லட்சம் திருட்டு
கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.6 லட்சம் திருடப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு சங்கர் நகரை சேர்ந்த சேக் முகமது மகன் சையது முகமது புகாரி (வயது37). இவர் சண்முகா நகரில் தீப்பெட்டி மூலப்பொருள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள வங்கியில் ரூ.6 லட்சத்தை எடுத்து, மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். பின்னர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்தபோது பெட்டி உடைக்கப்பட்டு ரூ.6 லட்சத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story