கோவில்பட்டியில் ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்


கோவில்பட்டியில்  ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:15:58+05:30)

கோவில்பட்டியில் நடந்த ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவி்ல்பட்டி காமராஜர் அரங்கில் மத்திய ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர்கள் சீனிவாசன், அழகுராஜ், சின்னத்தாய், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் வரவேற்றார். கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் கே. சந்திரசேகர், பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story