கோவில்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை
கோவில்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மின்வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின்விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை
கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் இளையரசனேந்தல் ரோடு, பைபாஸ் ரோடு, வி. எம். எஸ். நகர், சித்திரம்பட்டி ரோடு, மூப்பன்பட்டி காலனி, காந்திநகர், திலகர் நகர் ஆகிய பகுதிகளிலும், கோவில்பட்டி சிட்கோ உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் எட்டயபுரம் ரோடு பி.டி.ஓ ஆபீஸ் முதல் மந்திதோப்பு ரோடு வரை மற்றும் லெலில் நகர், பாரதி நகர், ஸ்ரீராம் நகர், ராமையா நகர் ஆகிய பகுதிகளிலும், விஜயாபுரி உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் விஜயாபுரி ரோடு பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.