கோவில்பட்டி நகரில் ரூ.2.84 கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்த திட்டம்


கோவில்பட்டி நகரில்  ரூ.2.84 கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்த திட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி நகரில் ரூ.2.84 கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்த நகரசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை அவசர கூட்டம் நேற்று மதியம் நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் கா. கருணாநிதி தலைமை தாங்கினார். நகரசபை ஆணையாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையின்படி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும் தலா 4 பேர் கொண்ட குழு அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. நகரிலுள்ள தெருக்களில் எல்.இ.டி. மின்விளக்குகள் அமைத்திட ரூ.2 கோடியே 84 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க மன்ற அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை நகரசபை தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து நகரசபை அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரசபை ஆணையாளர் ராஜாராம், சுகாதார அலுவலர் நாராயணன், வருவாய் அலுவலர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் பிரேம் குமார், மேலாளர் பெருமாள், நகரசபை கவுன்சிலர்கள் கருப்பசாமி, சண்முகவேல், புவனேஸ்வரி, ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story