கோவில்பட்டி பள்ளியில்விவேகானந்தர் ஜெயந்தி விழா
கோவில்பட்டி பள்ளியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி அரங்கில் விவேகானந்தர் ஜெயந்தி விழா மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்- மாணவிகளுக்கான பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கேந்திர பொறுப்பாளர் பரமகுரு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 80 கிராமப்புற பள்ளிகளில் இருந்து 325 மாணவ- மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். கேந்திர துணை தலைவர் நிவேதிதா எழுதிய பாரத பண்பாடு புத்தகத்தை கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் வெளியிட்டார். முதல் பிரதியை பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் மதன் மற்றும் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பண்பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு எல்.ஐ.சி.வளர்ச்சி அதிகாரி செந்தில்குமார் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.