குலசேகரன்பட்டினத்தில்கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலி
குலசேகரன்பட்டினத்தில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலியானார்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முப்புடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலி (வயது 63). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனால் சுடலி தனது சகோதரர் சங்கரநாராயணன் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று குளிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து சங்கரன் நாராயணன் பல்வேறு இடங்களில் தேடியும் சுடலி கிடைக்கவில்லை. இந்நிலையில் ஊருக்கு அருகில் பொதுமக்கள் பலரும் குளிக்கும் கிணற்றுக்குள் சுடலி பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டவிசாரணையில், குளிக்க சென்ற அவர் கிணற்றில் தவறி விழுந்து இருந்ததாக தெரிய வந்துள்ளது.