குலசேகரன்பட்டினத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா


குலசேகரன்பட்டினத்தில்  புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்று நவநாள் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா நாட்களில் மாலையில் நவநாள் திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு நவநாள் திருப்பலி, மாலை 6 மணிக்கு திருவிழா, மாலை ஆராதனை, நேற்று காலையில் திருவிழா திருப்பலி, மாலை 5 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். பங்குத்தந்தை விக்டர் லோபோ மற்றும் பங்கு பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.


Next Story