எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு:குமரி மாவட்டத்தில் 97.22 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி; மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு:குமரி மாவட்டத்தில் 97.22 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி; மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
x

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் குமரி மாவட்டத்தில் 97.22 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம் பிடித்து குமரி மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் குமரி மாவட்டத்தில் 97.22 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம் பிடித்து குமரி மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

97.22 சதவீதம் தேர்ச்சி

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவு நேற்று மதியம் வெளியிடப்பட்டது. குமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 11,405 மாணவர்களும், 11,580 மாணவிகளுமாக மொத்தம் 22,985 பேர் தேர்வு எழுதினர்.

அவர்களில் 10,893 மாணவர்களும், 11,452 மாணவிகளும் ஆக மொத்தம் 22,345 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.51-ம், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.89-ம் ஆகும். இதன் சராசரி சதவீதம் 97.22 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 559 பேர் அதிகமாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கல்வி மாவட்டம் வாரியாக...

நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 7,518 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 7,200 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 95.77 ஆகும். தக்கலை கல்வி மாவட்டத்தில் 6,653 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 6,473 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 97.29 சதவீதம் ஆகும்.

குழித்துறை கல்வி மாவட்டத்தில் 4,552 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 4,501 தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 98.88் சதவீதம் ஆகும். திருவட்டார் கல்வி மாவட்டத்தில் 4,262 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 4,171 தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 97.86 ஆகும்.

மாநில அளவில் முதலிடம்

கல்வி மாவட்டம் வாரியாகவும் மாணவர்களைவிட, மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குமரி மாவட்டம் 97.22 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

கல்வி மாவட்டம் வாரியாக 100-க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கல்வி மாவட்ட அதிகாரிகள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story