குரும்பூரில்2 மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
குரும்பூரில் 2 மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
தென்திருப்பேரை:
குரும்பூர் பஜாரில் உள்ள தனியார் எடை நிலையத்தில் வேலை பார்த்து வருபவர் பிரிஜிலாயூஜீன். இந்த எடைநிலையத்துக்கு அருகே குரும்பூரைச் சேர்ந்த ஜெயக்கொடி மகன் கலைச்செல்வன் என்ற கண்ணன் பழைய இரும்பு விற்பனை கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரிட்ஜிலாவின் மோட்டார் சைக்கிளையும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளையும் கலைச்செல்வன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு ஓடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வனை கைது செய்தார்.
Related Tags :
Next Story