சேலத்தில் பரபரப்பு 10 நாய்களை கொன்று உடல் ஏரியில் வீச்சு-போலீசார் விசாரணை
சேலத்தில் 10 தெரு நாய்களை கொன்று ஏரியில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
ஏரியில் நாய்கள் உடல்
சேலம் ரெட்டியூர் அருகே இஸ்மாயில்கான் ஏரி உள்ளது. இந்த ஏரியில் நாய்கள் செத்து மிதப்பதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து விசாரணை நடத்திய போது 10 தெருநாய்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் உணவு வழங்கி வந்ததும், கடந்த 2-ந்தேதி முதல் தெரு நாய்கள் காணாமல்போனதும் தெரிந்தது.
விஷம் வைத்தது யார்?
இதுகுறித்து போலீசார் கூறும் போது, தெரு நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்தோ அல்லது அடித்தோ கொன்று ஏரியில் வீசி உள்ளனர். எனவே இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story