பெருந்துறையில்வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்நாளை மறுநாள் நடக்கிறது
குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மைய கூட்டரங்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்களுக்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் தொழில் அதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்களை தெரிவித்து பயன்அடையலாம்.
இந்த தகவலை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன மண்டல ஆணையாளர் வீரேஷ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story