மானங்காத்தான் காலனியில்கான்கிரீட் தொகுப்பு வீடுகள் திறப்பு விழா


மானங்காத்தான் காலனியில்கான்கிரீட் தொகுப்பு வீடுகள் திறப்பு விழா
x
தினத்தந்தி 25 Oct 2023 12:15 AM IST (Updated: 25 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மானங்காத்தான் காலனியில் கான்கிரீட் தொகுப்பு வீடுகள் திறப்பு விழா நடந்தது. இதில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகிலுள்ள மானங்காத்தான் கிராமத்திலுள்ள காலனியில் 9 புதிய தொகுப்பு வீடுகளை கனிெமாழி எம்.பி. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து ெகாண்டார்.

புதிய தொகுப்பு வீடுகள் திறப்பு

கயத்தாறு யூனியன் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மானங்காத்தான் கிராமத்தில், 1996-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட காலனி தொகுப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்து இருந்தது. சிதிலமடைந்திருந்த இந்த வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு கட்டித் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் முயற்சியால், தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து விட்டு, புதிதாக கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டும்பணி தொடங்கியது. இதில் 9 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை வகித்தார். அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகித்தார்.

கனிமொழி எம்.பி.

இதில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய தொகுப்பு வீடுகளை திறந்து வைத்து பேசினார்.

இந்த விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.சின்னப்பாண்டியன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை, மாவட்ட திட்டக்குழ உறுப்பினர் கே.கே.ஆர்.அய்யாத்துரைப்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் ப்ரியாகுருராஜ், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கயத்தாறு நகரச் செயலாளர் சுரேஷ் கண்ணன், தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், யூனியன் கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கயத்தாறு யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியராஜன், சுப்புலட்சுமி, பொறியாளர்கள் சித்ரா, செல்வம், செந்தில், பீர் முஹம்மது மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உமறுப்புலவருக்கு மரியாதை

சீறாப்புராணம் எழுதிய அமுதகவி உமறுப்புலவர் 381-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் அமைச்சர் கீதா ஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது வாரிசுதாரரான காஜா மைதீன் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்.

இதில் எட்டயபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் ராமலட்சுமி, கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் நவநீதக்கண்ணன், அன்புராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story