மயிலாடுதுறையில், பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்
சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து மயிலாடுதுறையில், பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து மயிலாடுதுறையில், பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் பா.ஜ.க.சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அகோரம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் நாஞ்சில் பாலு வரவேற்றார். முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் மாநில தலைவர் எம்.கே.ராமன், மயிலாடுதுறை மாவட்ட பார்வையாளர் பி.எல். அண்ணாமலை, மாநில வக்கீல் பிரிவு பொறுப்பாளர் வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்
சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.அரசை கண்டித்தும், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் கட்சியின் அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் கோவி.சேதுராமன், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் மோடி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் வினோத் நன்றி கூறினார்.