மேலக்கரந்தையில்ரூ.37.15 லட்சத்தில் துணை சுகாதார நிலையம்:கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்


மேலக்கரந்தையில்ரூ.37.15 லட்சத்தில் துணை சுகாதார நிலையம்:கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேலக்கரந்தையில் ரூ.37.15 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள கீழஈராலில் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு ்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மகளிருக்கான பணிக்கூடம் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பணிக்கூடத்தினை திறந்து வைத்தார். மேலும் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் ரூ.37.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், எட்டயபுரம் தாசில்தார் மல்லிகா, கீழ ஈரால் ஊராட்சி மன்ற தலைவர் பச்சை பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story