முத்தையாபுரத்தில் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
முத்தையாபுரத்தில் வீட்டில் 10 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி
முத்தையாபுரம்:
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள சாந்திநகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 61). இவரது மனைவி ராமவள்ளி மயில். கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்த அவர் கடந்த 17-ந்தேதி இறந்துவிட்டார். மறுநாள் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர் அணிந்திருந்த 8பவுன் தங்கத் தாலி, 2பவுன் நெக்லஸ் ஆக மொத்தம் 10 பவுன் நகைகளையும் ராமநாதன் சூட்கேசில் வைத்து பூட்டி வீட்டில் வைத்துள்ளார். நேற்று முன்தினம் ராமநாதன் அவரது சொந்த ஊரான சிவகங்கை செல்வதற்காக புறப்பட்டார். அப்போது வீட்டில் சூட்கேசை இருந்த நகைகளை எடுத்து செல்ல பார்த்துள்ளார். அப்போது அந்த சூட்கேஸ் உடைக்கப்பட்டு 10 பவுன் நகைகளும் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story