முத்தையாபுரத்தில் முதியவர் மீது தாக்குதல்


முத்தையாபுரத்தில்  முதியவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முத்தையாபுரத்தில் முதியவர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சுந்தரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிராஜ் (வயது60). பெயிண்டிங் காண்ட்ராக்டராக உள்ளார். இவர் முத்தையாபுரம் பாரதிநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் 5 பேர் அரிவாள், உருட்டுக்கட்டை உள்பட ஆயுதங்களுடன் வந்து மணிராஜை தாக்கினர். இதில் காயம் அடைந்த மணிராஜ் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்கு பதிவு ெசய்து அந்த 5 பேரை தேடி வருகிறார்.


Next Story