முத்தையாபுரத்தில் வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்த முதியவர் பலி


முத்தையாபுரத்தில்  வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்த முதியவர் பலி
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முத்தையாபுரத்தில் வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்த முதியவர் பலியானார்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

மதுரை ஐரவதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 67). மதுரையில் பருப்பு வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாததால் நெல்லையில் உள்ள அவரது சகோதரர் நெல்லையப்பன் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் உள்ள மருமகன் பாண்டியராஜன் வீட்டிற்கு வந்த நடராஜன், அவருடைய வீட்டில் இருந்த படிக்கட்டில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story