முத்தையாபுரத்தில் மனைவி, மகனை கத்தியால் குத்திய தொழிலாளி
முத்தையாபுரத்தில் மனைவி, மகனை கத்தியால் குத்திய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சுந்தர்நகரைச் சேர்ந்தவர் கருணாகரன். தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி (வயது38). மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி கருணாகரன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவரது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்த கருணாகரன் கத்தியால் குத்தியுள்ளார். இதை தடுக்க முயன்ற மகன் யசோதை ராமனுக்கும், கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த காளீஸ்வரியையும், அவரது மகன் யசோதை ராமனையும் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் கருணாகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.