முத்தையாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


முத்தையாபுரத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு   கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:15:57+05:30)

முத்தையாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி புறநகர குழு சார்பில் முத்தையாபுரம் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் குழு உறுப்பினர் பூராடன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, புறநகரச் செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story