முத்தையாபுரத்தில் தண்ணீர் டேங்கர் லாரிகள் நேருக்கு நேர் மோதல்:போக்குவரத்து பாதிப்பு


முத்தையாபுரத்தில் தண்ணீர் டேங்கர் லாரிகள் நேருக்கு நேர் மோதல்:போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 5:27 PM IST)
t-max-icont-min-icon

முத்தையாபுரத்தில் தண்ணீர் டேங்கர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி பகுதியிலிருந்து தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று திருச்செந்தூர் சாலையில் நேற்று மாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தது. முத்தையாபுரம் பெட்ரோல் பங்க் அருகே அந்த டேங்கர் லாரியும், எதிரே வந்த மற்றொரு தண்ணீ்ர் டேங்கர் லாரியும் திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டன. அந்த லாரிகளின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் ஒரு லாரியின் டீசல் டேங்க் வெடித்து சாலை முழுவதும் டீசல் பரவியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அல்லி அரசன் தலைமையிலான போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து உடனடியாக டேங்கர் லாரியில் இருந்த தண்ணீரை சாலை முழுவதும் பீச்சி அடித்து சாலையில் படர்ந்த டீசலை அப்புறப்படுத்தினர். மேலும், கிரேன் மூலம் 2 டேங்கர் லாரிகளையும் போலீசார் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். இந்த லாரி விபத்தால், அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் 2 டேங்கர் லாரி டிரைவர்களும் காயமின்றி தப்பினர்.


Next Story