முத்தையாபுரத்தில்கணவரை தாக்கிய பெண் கைது


தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முத்தையாபுரத்தில் கணவரை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

முத்தையாபுரம் தங்கமணி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பட்டுராஜா. தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 32). பட்டுராஜா பக்கத்து வீட்டில் வசிக்கும் சுடலைமணி என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதில் ஆயிரம் ரூபாய் பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது இதனை திருப்பி கேட்பதற்காக பட்டுராஜரா வீட்டிற்கு சுடலைமணி சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் இல்லாததால் மாரியம்மாளிடம் பணத்தை கேட்டு கொண்டிருந்தாராம். இதை அறிந்த சுடலைமணி மனைவி கிருஷ்ணம்மாள், கணவர் மீது சந்தேகப்பட்டு, அவரது தாயார், தம்பி மற்றும் உறவினர்களுடன் மாரியம்மாள் சென்றுள்ளார். அங்கு பேசிக் கொண்டிருந்த சுடலைமணி, மாரியமாளை கம்பால் தாக்கியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த சுடலைமணியும், மாரியம்மாளும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமாளை கைது செய்தார்.


Next Story