முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை


முத்தையாபுரத்தில்  தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
x

முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் வரத விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முருகையா (வயது 45). கூலித் தொழிலாளி. இவர், மனைவி ஆவுடையார் தாய் மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் குழந்தைகள் மற்றும் மனைவியை மாமனார் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் அவர் திடீரென்று வீட்டை பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரது உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story